×

ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்; ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சட்டீஸ்கர் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார் பூபேஷ் பாகேல்

ராய்பூர்: சட்டீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. சட்டீஸ்கரின் 90 பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரசும், ஆட்சியை கைப்பற்ற பாஜவும் தீவிரமாக களமிறங்கி உள்ளன. இதனால் அங்கு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் வெளியிட்டார்.

அதில்; ஆண்டுதோறும் டெண்டு இலை (பீடி இலை) சேகரிப்பவர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும். விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடரும். மழலையர் கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவசக்கல்வி வழங்கப்படும். வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். குப்சந்த் பாகேல் சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும். முதலமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும். ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் இவ்வாறு கூறினார்.

The post ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்; ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சட்டீஸ்கர் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார் பூபேஷ் பாகேல் appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh Congress ,Bhupesh Bagel ,Raipur ,Congress ,Chhattisgarh.… ,Dinakaran ,
× RELATED இவிஎம்மில் என் போட்டோ சிறிதாக உள்ளது:...